Saturday, May 18, 2024
Home » டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வணிந்து ஹசரங்க ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வணிந்து ஹசரங்க ஓய்வு

- மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு

by Rizwan Segu Mohideen
August 15, 2023 10:28 am 0 comment

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது தீர்மானத்தை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வணிந்து கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் தான் குறித்த முடிவை எடுத்துள்ளதாதாக, வணிந்து ஹசரங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சகல துறை ஆட்டக்காரரான வணிந்து ஹசரங்க, இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதோடு, துடுப்பாட்டத்தில் 196 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

அவரது ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்றுள்ளதாக அறிவித்துள்ள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, வெள்ளைப் பந்து போட்டிகளில் (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்) வணிந்து ஹசரங்க முக்கிய பங்கு வகிப்பார் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வணிந்து ஹசரங்க
துடுப்பாட்டம், களத்தடுப்பு பெறுதி

FORMAT Mat Inns NO Runs HS Ave BF SR 100s 50s 4s 6s Ct St
Test 4 7 0 196 59 28.00 227 86.34 0 1 29 1 2 0
ODI 48 42 7 832 80* 23.77 755 110.19 0 4 75 27 15 0
T20I 58 49 11 533 71 14.02 430 123.95 0 1 54 8 22 0
FC 44 75 8 2657 120 39.65 3001 88.53 3 19 316 56 50 0
List A 91 80 15 1655 87 25.46 1448 114.29 0 10 153 58 34 0
T20 155 119 27 1693 77* 18.40 1189 142.38 0 7 172 48 70 0

பந்துவீச்சு பெறுதி

FORMAT Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10w
Test 4 7 674 403 4 4/171 4/171 100.75 3.58 168.5 1 0 0
ODI 48 47 2279 1928 67 6/24 6/24 28.77 5.07 34.0 1 3 0
T20I 58 56 1252 1438 91 4/9 4/9 15.80 6.89 13.7 2 0 0
FC 44 73 4901 2822 102 8/26 10/143 27.66 3.45 48.0 5 7 1
List A 91 83 3903 3088 131 6/24 6/24 23.57 4.74 29.7 6 6 0
T20 155 149 3187 3640 208 5/18 5/18 17.50 6.85 15.3 5 2 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT