Sunday, May 12, 2024
Home » பொதுவெளி திரையிடல், நாடகங்கள், கச்சேரிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிப்பு

பொதுவெளி திரையிடல், நாடகங்கள், கச்சேரிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிப்பு

- ரூ. 20,000 கட்டணம் ரூ. 40,000 ஆக அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
August 13, 2023 10:28 am 0 comment

– எதிர்வரும் ஓகஸ்ட் 15, செவ்வாய்க்கிழமை முதல் அமுல்

பொதுவெளிகளில் மேற்கொள்ளும் காட்சிகளுக்கு பெற வேண்டிய அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்களை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்நாட்டு, வெளிநாட்டு திரைப்படங்கள், திரைப்பட முன்னோட்டங்கள் (Trailer), மேடை நாடகங்கள், இசைக் கச்சேரிகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்துவதற்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிவித்தலுக்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் குறித்த கட்டண திருத்தங்கள் அமுலுக்கு வருகிறது.

இதற்கு முன்னர் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் அதன் முன்னோட்ட காட்சிகளுக்கு அறவிடப்பட்ட ரூ. 20,000 கட்டணமானது, ரூ. 40,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு திரைப்படங்கள் மற்றும் அதன் முன்னோட்ட காட்சிகளுக்கு அறவிடப்பட்ட ரூ. 10,000 கட்டணமானது, ரூ. 15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதிப்பத்திரத்தை ஒரே நாளில் பெறுவதற்காக, மேலதிகமாக 50% கட்டணம் அறுவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவினால், பொது அரங்காட்டல் (Public Performance) சட்டத்தின் கீழ் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழைய கட்டணங்கள்1922-49_T

புதிய கட்டணங்கள்2344-40_T2344-40_E

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT