Sunday, May 12, 2024
Home » மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சோபித ராஜகருணா

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சோபித ராஜகருணா

- மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக சஞ்சீவ மொராயஸ்

by Rizwan Segu Mohideen
August 7, 2023 5:38 pm 0 comment

– இருவரும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக, நீதிபதி சோபித ராஜகருணா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துடன், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT