Tuesday, May 21, 2024
Home » ஆஸியை வீழ்த்தி ஆஷஸை சமன் செய்தது இங்கிலாந்து

ஆஸியை வீழ்த்தி ஆஷஸை சமன் செய்தது இங்கிலாந்து

by sachintha
August 2, 2023 6:01 am 0 comment

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஆஷஸ் தொடரை 49 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொரை 2–2 என சமநிலையில் நிறைவு செய்தது.

ஓவலில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு 384 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியின் கடைசி நாளான கடந்த திங்கட்கிழமை (31) விக்கெட் இழப்பு இன்றி 135 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலேயே ஆஸி. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

எனினும் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ஆஸி. அணி 334 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவட் பிரோட் அவுஸ்திரேலிய அணியின் கடைசி இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283 ஓட்டங்களை பெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி 295 ஓட்டங்களை குவித்தது. தொடர்ந்து இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 395 ஓட்டங்களை பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT