Sunday, May 12, 2024
Home » கோழி இறைச்சி: 1kg ரூ. 100 இனால் குறைக்க முடிவு

கோழி இறைச்சி: 1kg ரூ. 100 இனால் குறைக்க முடிவு

by Rizwan Segu Mohideen
August 1, 2023 1:36 pm 0 comment

கோழி இறைச்சி விலையை ரூ. 100 இனால் குறைக்க, உள்நாட்டு கோழி இறைச்சிப் பண்ணை உரிமையாளர்கள் இணக்கம் தெரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் பண்ணை உரிமையாளர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில் இவ்வாறு விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக, அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, கோழித் தீனுக்காக பயன்படுத்தப்படும் சோளத்திற்கான இறக்குமதி வரியான, ரூ. 75 இனை ரூ. 25 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் இதன்போது விடுத்த வேண்டுகோளை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT