Monday, May 20, 2024
Home » தேசிய கராத்தே போட்டிக்கு ஐ.எம்.ஏ. மாணவர்கள் தெரிவு

தேசிய கராத்தே போட்டிக்கு ஐ.எம்.ஏ. மாணவர்கள் தெரிவு

by gayan
July 27, 2023 5:51 pm 0 comment

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் வட மாகாணத்திற்கான மாகாண மற்றும் மாவட்ட கராத்தே போட்டிகள் கடந்த வாரம் கிளிநொச்சியில் நடைபெற்றது.

இப்போட்டியில் சர்வதேச தற்காப்புக் கலை சங்கத்தின் (ஐ.எம்.ஏ.) வவுனியா மாவட்ட கிளை மாணவர்கள் பங்குபற்றி 34 பதக்கங்களைப் பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

13 வயதுக்கு கீழ் மாவட்ட மட்ட போட்டியில் 10 மாணவர்கள் பங்குபற்றி மொத்தமாக 24 பதக்கங்களை வென்றுள்ளனர். மாகாண மட்ட போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பிரிவில் மொத்தமாக 10 பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT