Friday, May 17, 2024
Home » முதல் தடவையாக பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு

முதல் தடவையாக பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு

- நாளை இலங்கை வருகிறார் இம்மானுவேல் மக்ரோன்

by Rizwan Segu Mohideen
July 27, 2023 11:08 am 0 comment

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனின் அழைப்பினை ஏற்று பிரான்ஸின் பரிஸ் நகரில் ஜூன் 22 – 23 இல் நடைபெற்ற A New Global Financial Pact (புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்) தொடர்பிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றியிருந்தார். 

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் ஜனாதிபதிக்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT