Monday, May 20, 2024
Home » அவுஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கைப் பெண் கெசென்ரா இலங்கை விஜயம்

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கைப் பெண் கெசென்ரா இலங்கை விஜயம்

by gayan
July 27, 2023 2:08 pm 0 comment

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஃபெடரல் தேர்தலில் அந்நாட்டு தொழில் கட்சியினை பிரதிநிதித்துவம் செய்து அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது இலங்கை வம்சாவளியை கொண்ட 35 வயது கெசென்ரா பெர்ணான்து இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்கு குடியேறிய கெசென்ரா வடக்கு விக்டோரியா பிராந்தியத்தில் தென்கிழக்கு மெல்போன் நகரான டென்டினோன் பிரதேசத்தில் வசித்து வருபவர். வில்லியம் ஆன்கிலிஷ் கல்வி நிறுவனம் மற்றும் பொக்ஸ்ஹில் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் அவர் கல்வி கற்றுள்ளார். டென்டினோன் பிளாசா பல்பொருள் அங்காடியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற வுல்வதர் வர்த்தக நிலையத்தில் பேஸ் ரீ தயாரிப்பு சமையல் கலைஞராக அவர் பணியாற்றினார்.

பல்வேறு துறைகளில் 15 வருடங்கள் சேவையாற்றிய அவர், அந்நாட்டின் சில்லறை மற்றும் திடீர் உணவுகள் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்து அரசியலில் இணைந்து கொண்டார். அரசியலில் நுழைவதற்கு முன்னர் ஆங்கிலத்தைப் பேச முடியாத பின்னணி கொண்ட அவுஸ்திரேலியாவுக்கு குடியேறியவர்கள் மற்றும் அகதிகளுக்கு ஒரு தொண்டராக அது தொடர்பான அறிவையும் புரிந்துணர்வையும் பெற்றுக்கொடுக்க முன்வந்ததோடு, கொவிட் தொற்று காலம் பூராகவும் மிகவும் சுறுசுறுப்பாக நடவடிக்கையில் ஈடுபட்டு, தொழிலாளர்களின் ஊழியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தனது குரலை எழுப்பியவராவார்.

அயராது உழைக்கும் திறன் அர்ப்பணிப்பு மற்றும் நன்றியறிதலை தனது வாழ்க்கையின் கொள்கை என்று ஏற்றுக் கொண்ட அவர் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள இலங்கையர்களின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் பல சவால்களை வெற்றி கொண்ட தைரியமான பெண்ணாவார்.

தமிழில்: வயலட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT