Monday, May 20, 2024
Home » அஸ்-ஸிறாஜ் அணி வெற்றி

அஸ்-ஸிறாஜ் அணி வெற்றி

by sachintha
July 24, 2023 3:07 pm 0 comment

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் அல்-முனவ்வரா கனிஷ்ட வித்தியாலய உத்தியோகத்தர்களுக்கிடையில் நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் அணி வெற்றிபெற்றது.

அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (21) காலை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அஸ்-ஸிறாஜ் அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய முஸ்னிக் அஹமட் 88 ஒட்டங்களை பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அல்-முனவ்வரா அணி 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லா வெற்றிக் கிண்ணத்தை அஸ்-ஸிறாஜ் அணியினருக்கு வழங்கி வைத்தார்.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT