Tuesday, May 14, 2024
Home » ரெலிகொம் தலைவர் பதவியிலிருந்து ரொஹான் நீக்கம்; றியாஸ் மிஹுலார் நியமனம்

ரெலிகொம் தலைவர் பதவியிலிருந்து ரொஹான் நீக்கம்; றியாஸ் மிஹுலார் நியமனம்

- பணிப்பாளர் சபையினால் தீர்மானம்

by Rizwan Segu Mohideen
July 20, 2023 1:23 pm 0 comment

ஶ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பபட்டுள்ளதாக, ரொஹான் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையின் தீர்மானத்திற்கு அமைய தாம் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ரொஹான் பெனாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இன்று (20) கூடிய ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்கு றியாஸ் மிஹுலாரை நியமிக்கவும் சபை முடிவு செய்துள்ளது.

றியாஸ் மிஹுலார், கடந்த மார்ச் மாதம் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தினன் பணிப்பாளர் சபைக்கு நிறைவேற்று அல்லாத சுயாதீன பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி பங்குகளை விற்பனை செய்தல் மற்றும் தனியார்மயமாக்கல் தொடர்பான நடவடிக்கைக்கு மத்தியில் உள்ள நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் வெளிபிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஜனாதிபதியின் கீழுள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் ரெலிகொம் நிறுவனமும் உள்ளடங்குகின்றது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக, கடந்த மே மாதம் உயர் நீதிமன்றத்திற்கு திறைசேரியின் செயலாளர் உறுதிமொழி அளித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் 49.5% ஆன பங்குகளை திறைசேரி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT