Monday, May 20, 2024
Home » 90,000 பாவனையாளரது நீர் வழங்கும் சேவை துண்டிப்பு

90,000 பாவனையாளரது நீர் வழங்கும் சேவை துண்டிப்பு

by sachintha
July 18, 2023 6:34 am 0 comment

நீர் வழங்கல் அதிகார சபை அதிரடி

நீர்க்கட்டணம் செலுத்தத் தவறிய 90,000 பாவனையாளர்களுக்கு நீர் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் மே மாத நிலவரப்படி சுமார் 8 பில்லியன் ரூபாய் நீர் கட்டணங்கள் நிலுவையில் உள்ளதாக அச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், மொத்த நீர் கட்டண தொகையில் 7.1 பில்லியன் ரூபாய் நிலுவை, வீட்டு நீர் விநியோக பாவனையாளர்களால் செலுத்தப்படாமல் உள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களில் 32 மில்லியன் ரூபாவும், பொது நீர் விநியோகத்தில் 262 மில்லியன் ரூபாவும், தொழிற்சாலைகளில் 15 மில்லியன் ரூபாவும் மற்றும் அரச நிறுவனங்களில் 656 மில்லியன் ரூபாவும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் வகையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 90,617 பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை துண்டித்துள்ளதுடன், 5,277 நுகர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT