Wednesday, May 15, 2024
Home » பேராதனை யுவதி மரணம்; விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சிடம் இன்று கையளிப்பு

பேராதனை யுவதி மரணம்; விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சிடம் இன்று கையளிப்பு

by Prashahini
July 17, 2023 10:46 am 0 comment

பேராதனை வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் உயிரிழந்தாக கூறப்படும் 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (17) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வயிற்று வலி காரணமாக அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த 21 வயதான யுவதி, குறித்த வைத்தியசாலையினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. அதன்படி, குறித்த குழு அண்மையில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தது.

இவ்வாறான பின்னணியில், கண்டி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நோயாளர்களுக்கு, உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட செஃப்ட்ரோஎக்சோன் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டதை அடுத்து ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். அதற்கமைய, குறித்த மருந்தை பயன்பாட்டில் இருந்து, இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT