Sunday, May 19, 2024
Home » கருணாரத்னவுக்கு காயம்

கருணாரத்னவுக்கு காயம்

by admin
July 10, 2023 9:36 am 0 comment

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன பின் தொடை பகுதியில் தசைப்பிடிப்பால் பதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் நேற்று (09) நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் நெதர்லாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் விரைவில் நடைபெறவிருப்பதால் காயம் மேலும் தீவிரம் அடைவதை தவிர்ப்பதற்காக நேற்றைய போட்டியில் ஆடவில்லை என்று கருணாரத்ன போட்டிக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.

“இந்த இறுதிப் போட்டியில் ஆடாதது கவலை அளித்தபோதும் அதனை விடவும் டெஸ்ட் போட்டி முக்கியமாக உள்ளது. அதற்குத் தான் எனது முன்னுரிமை உள்ளது. வருடத்திற்கு நான்கு, ஐந்து டெஸ்ட் போட்டிகள் தான் எமக்குக் கிடைக்கின்றன. இந்த வருடத்தில் இருக்கும் கடைசி டெஸ்ட் தொடர் இது. அதற்கு முடியுமானவரை தயாராவதே எனது இலக்கு” என்றும் கருணாரத்ன தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT