Home » அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டம் அமுலில்

அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டம் அமுலில்

பாராளுமன்றில் கஜேந்திரகுமார் உரை

by gayan
July 7, 2023 6:00 am 0 comment

அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே நாட்டில் பின்பற்றப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் நேற்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக தடுத்து வைக்கப்பட்டுள்ள

அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாத் தடைச்சட்டத்தை இல்லாது செய்ய வேண்டுமென கடந்த அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போது 19 பேர் இந்தச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுவே, அனைவரது கருத்தாகவும் உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்தபோது, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகிவிட்டன. ஏனைய நாடுகளில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT