பட்டத்தின் நூலுடன் பறிபோன சிறுவனின் உயிர் | தினகரன்


பட்டத்தின் நூலுடன் பறிபோன சிறுவனின் உயிர்

 
கலேவல, பம்பரகஸ்வெவ பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
 
கொஸ்கஸ்ஹின்ன பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி பயிலும் எட்டு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
 
நேற்றைய தினம் (29) பாடசாலையில் இடம்பெற்ற உதவி வகுப்பில் பங்குபற்றியதன் பின்னர், பெற்றோர்கள் அறிந்திராத நிலையில் நண்பர்கள் சிலருடன், பட்டம் விட்டு விளையாட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
இதன்போது, பட்டத்தின் நூலை பிடித்தவாறு பின்நோக்கி சென்ற சிறுவன் திடீரென கிணற்றில் வீழ்ந்ததாக அச்சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த ஏனைய சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
இதனையடுத்து, அயலவர்கள் சேர்ந்து குறித்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
 
தாங்கள் பட்டம் விட்டு விளையாடும்போது மற்றுமொரு சிறுவனின் கழுத்தில் நூல் சிக்கி காயம் ஏற்பட்டதாக குறித்த சிறுவன், தன்னிடம் தெரிவித்த நிலையில், பட்டம் விட செல்ல வேண்டாம் என தான் அறிவுறுத்தியதாக குறித்த சிறுவனின் உதவி வகுப்பு ஆசிரியை அழுதவாறு தெரிவித்தார்.
 
 
 
 

Add new comment

Or log in with...