மூன்று இராஜாக்கள் திருவிழாவும் முக்கிய வாழ்க்ைகப் படிப்பினைகளும் | தினகரன்


மூன்று இராஜாக்கள் திருவிழாவும் முக்கிய வாழ்க்ைகப் படிப்பினைகளும்

 

கத்தோலிக்கத் திருச்சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று இராசாக்கள் திருநாளைக் கொண்டாடியது.

திருவருகைக் காலத்தோடு ஆரம்பமான கிறிஸ்மஸ் கொண்டாட்டக் காலம் இத்தோடு நிறைவுக்கு வருகிறது.

கிறிஸ்து பிறப்பின் செய்தியை வால் நட்சத்திரம் கீழ்த்திசை ஞானிகளுக்கு அறிவித்ததாகவும் அதன் திசைகாட்டுதலில் ஞானிகளான மூன்று இராஹாங்ககள் உலகத்தின் மீட்பர் பிறந்துள்ளார் என்ற செய்தியறிந்து அவரைத் தருவிக்க பயணித்ததாகவும் வரலாறுகள் உள்ளன.

அவர்கள் பல வாரங்கள் பயணித்து பெத்லகேமில் மாட்டிடைக் குரலில் பிறந்திருந்த இயேசு பாலனைத் தரிசித்தனர். அவர்கள் வெறுங் கையுடன் வரவில்லை கைகளில் வெள்ளைப் போலம், பொன், வெள்ளிகளை அவர்களுக்குக் காணிக்கையாக்கினர்.

அவர்கள் பயணித்த பாதையில் பல்வேறு தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது எனினும் இறை யேசுவைத் தேடும் பயணத்தில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இறுதியில் அவரைக் கண்டு மகிழ்ந்து திருப்தியடைந்தனர்.

இந்தத் திருவிழா தேடுதலையும் விசுவாச வாழ்க்கைப் பயணத்தில் இறைவனைத் தேடும் முக்கியத்துவத்தையும் அதற்காக எதிர்கொள்ள நேரும் சவால்கள் தடைகளை வெற்றிகொள்வதையும் எமக்குக் கற்பிக்கின்றது.உலகம் அடிமைப்பட்டிருந்த நிலையில் அதனை இரட்சிக்க ஒரு மீட்பர் உதயமாவார் என்ற பேரெதிர்பார்ப்பு நிலவிய காலகட்டமொன்றிலேயே இயேசு பிறந்தார். அவரை மீட்பர் என சரியான புரிந்துகொண்டவர்களே இந்த மூன்று ஞானிகள். அத்தகைய மீட்பரை நேரில் தரிசித்து விட வேண்டும் என்ற பேராவல் அவர்களிடம் இருந்தது.

அவர்கள் தொடங்கிய பயணத்தில் இடையில் ஏரோது மன்னனைச் சந்திக்க நேர்ந்தது. வஞ்சக எண்ணம் கொண்ட அவன் தமக்கு எதிராகப் பிறந்துள்ளதாக இயேசு கிறிஸ்துவைக் கணித்து அப்பாவிகளை கொலை செய்யத் தீர்மானித்திருந்தவன்.ஞானியான மூன்று இராசாக்களை உபசரித்த அவர் அவர்களை வழியனுப்பும் போது நீங்கள் இயேசு பாலனைத் தரிசித்த பின் மீண்டும் திரும்பும் வழியில் அவர் பிறந்துள்ள இடம் தொடர்பில் தகவல் தாருங்கள் நானும் சென்று அவரைத் தரிசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றான்.

எனினும் அவனது சூழ்ச்சியை உணர்ந்த மூன்று ஞானிகளும் ஊர் திரும்புகையில் வேறொரு வழியாக பயணித்ததை கிறிஸ்து பிறப்பு வரலாறுகளில் காணக்கிடைக்கிறது.

அது முதல் தொடங்கிய இயேசுவுக்கு எதிரான சதி மற்றும் எதிர்ப்புச் செயற்பாடுகள் அவரது சிலுவை மரணம் வரை தொடர்ந்தது.

எனினும் சூழ்ச்சிகள், குரோதங்கள் வெற்றி கொள்ளவில்லை. இறையன்பே வெற்றிகொண்டது.

எமது வாழ்க்கையிலும் இத்திருவிழாவைக் கொண்டாடும் நாம் இதனை மனதில் கொண்டு வாழ்வுப் பாதையில் நம்பிக்கையுடன் முன்செல்வோம்.

எல். செல்வா 


Add new comment

Or log in with...