169
ஹற்றனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் வீதியின் குறுக்கே மரம் முறிந்து வீழ்ந்தமையால் அவ்வீதியூடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.
சம்பவ இடத்திற்கு வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களுடன் பொது மக்களும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது
கினிகத்தேனை தினகரன் நிருபர்