Friday, May 31, 2024
Home » ஓல்ட் பென்ஸ் – ஓல்ட் பீட்டரைட்ஸ் கால்பந்து போட்டிகள் ஞாயிறன்று

ஓல்ட் பென்ஸ் – ஓல்ட் பீட்டரைட்ஸ் கால்பந்து போட்டிகள் ஞாயிறன்று

by Gayan Abeykoon
April 5, 2024 7:48 pm 0 comment

கொட்டாஞ்சேனை ஓல்ட் பென்ஸ் கழகம், பம்பலப்பட்டி ஓல்ட் பீட்டரைட்ஸ் கழகம் ஆகியவற்றின் 40 வயதுக்குட்பட்ட மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட (வெட்டரன்ஸ்) அணிகள் மோதும்  கால்பந்தாட்டப் போட்டிகள் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் மைதானத்தில் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.40 வயதுக்கு மேற்பட்ட ஓல்ட் பென்ஸ் வெட்டரன்ஸ் மற்றும் ஓல்ட் பீட்டரைட்ஸ் வெட்டரன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஓல்ட் பென்ஸ் வெட்டரன்ஸ் அணிக்கு ரெண்டோல்வ் பெரேராவும் ஓல்ட் பீட்டரைட்ஸ் வெட்டரன்ஸ் அணிக்கு ரிமாஸ் ரம்ஸீனும் தலைவர்களாக செயற்படவுள்ளனர். இதேவேளை, 40 வயதுக்குட்பட்ட ஓல்ட் பென்ஸ் அணிக்கும் ஓல்ட் பீட்டரைட்ஸ் அணிக்கும் இடையிலான மில்ரோய் பெரேரா ஞாபகார்த்த கிண்ணத்துக்கான பிரதான போட்டி பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இப் போட்டியில் ஓல்ட் பென்ஸ் அணிக்கு ஏ.ஜீ.ஏ. சமீர சம்பத்தும் ஓல்ட் பீட்டரைட்ஸ் அணிக்கு கௌஷால் வர்ணகுலசூரியவும் தலைவர்களாக விளையாடுகின்றனர். 2019 மற்றும் 2022 இல் நடத்தப்பட்ட முதலிரண்டு தொடர்களிலும் ஓல்ட் பீட்டரைட்ஸ் வெற்றிபெற்றிருந்தது. 2022இல் முதல் தடவையாக நடத்தப்பட்ட வெட்டரன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஓல்ட் பென்ஸ் வெற்றிபெற்றிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT