Friday, November 1, 2024
Home » #BleedGood: மாதவிடாய் கால சிரமங்களைத்  தீர்த்தல்; அறிவூட்டல், வலுவூட்டல், அங்கீகரித்தல்

#BleedGood: மாதவிடாய் கால சிரமங்களைத்  தீர்த்தல்; அறிவூட்டல், வலுவூட்டல், அங்கீகரித்தல்

by Rizwan Segu Mohideen
March 19, 2024 3:12 pm 0 comment

Selyn  நிறுவனமானது தனது முழுமுதல் முயற்சியினை ஆரம்பித்து வைக்கின்றது

  • #BleedGood: Selyn நிறுவனமானது மாதவிடாய் கால சிரமங்களினை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கையில் தனது முயற்சியினை ஆரம்பிக்கின்றது.
  • #BleedGood இன் பிரதான அம்சமாக மீள்பயன்பாட்டிற்கு உகந்த  Pad கள்  மற்றும் மாதவிடாய் ஆரோக்கியம் சார்ந்த  அறிவூட்டல்  மற்றும் விழிப்புணர்வு  தொடர்பான  விளக்க உதவிகள்.
  • Selyn நிறுவனமானது இலங்கையில் மாதவிடாய் கால சிரமங்களிற்கு விடை காணும்முகமான போராட்டத்தில் சிறந்த பலன் தரக்கூடிய மாற்றங்களினை ஏற்படுத்த அதன் ஆர்வலர்களினை ஒன்றிணைக்கின்றது.

இலங்கை முழுவதும் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான ஆரோக்கியம்  மற்றும் அதன்  ஆதரவுக்கான அணுகலை மறுவரையறை செய்வதற்கான ஒரு தைரியம் மிக்க நடவடிக்கையாக, Selyn நிறுவனமானது  தனது முதன்மை #BleedGood முன்முயற்சியினை  மார்ச் 14, 2024 அன்று பெருமையுடன் வெளியிட்டது. BMICH  இன் Mihilaka Madhura நடைபெற்ற “இரத்தத்தால் பிணைக்கப்பட்டது” எனும் மகுடத்தின் கீழ்  நடைபெற்ற இந்நிகழ்வானது, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம்  சார்ந்த உரிமைகளை ஆதரிக்கும் அதே வேளையில் மாதவிடாய் தொடர்பான  சிரமங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய தருணத்தினை இது குறிக்கின்றது. #BleedGood என்பது மீண்டும் பயன்படுத்தக்கூடிய Pad கள், அறிவூட்டல்  கருத்தரங்குகள் மற்றும் மாதவிடாய் தொடர்பான ஆரோக்கியத்தில் நல்மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக  அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு ஆர்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளை உள்ளடக்கிய மனிதாபிமான ஆதரவினை வழங்கும்  ஒரு முழுமையான அணுகுமுறையினை  இது பிரதிநிதித்துவப் படுத்துகின்றது.  

 “Selyn நிறுவனதின் நோக்கமானது வெறுமனே பெண்கள் தொடர்பான மனித நேயம் எனும் விடையத்தினையும்  தாண்டி, எமது சமூகங்களில் இருக்கக் கூடிய  பெண்களின் வாழ்வியலில்  உறுதியான, நீடித்த மாற்றத்தினை ஏற்படுத்துவதோடு, அதனை ஆதரிப்பதற்கான ஒரு பரந்த பிரச்சார முன்முயற்சி அமைப்பினை உருவாக்கி ஊக்குவிப்பதுமாகும். பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும்  பகிரங்கமாகக் கூறமுடியாத சிரமங்களினை   நாம்  நேரடியாகக் கவனித்துள்ளோம், அவர்கள் மாதவிடாய் காலங்களில்  கடுமையான சவால்களினை  எதிர்கொள்கின்றனர், பெரும்பாலும் முக்கியமான மாதவிடாய் ஆரோக்கியப் பொருட்கள் இலகுவாக்க  கிடைப்பது  இல்லை அல்லது அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம்   மற்றும் உரிமைகள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வு இல்லை”. #BleedGood மூலம், எங்கள் அர்ப்பணிப்பானது வெறுமென Pad களினை  விநியோகிப்பதனைவிடவும் மேலானது; இது பெண்களுக்கு  அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியம்  மற்றும்  ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கட்டுப்படுத்த  தேவையான உறுதியான ஆதரவு அறிவூட்டல் போன்றவற்றினை வழங்குவது பற்றியதாகும். ஒவ்வொரு பெண்ணும் கெளரவத்தோடு  வாழ்க்கையினை தன்நம்பிக்கையுடன் கையாள்வதற்கான ஆதாரங்களைக் கொண்டவர்களாகவும், மாதவிடாயினை  மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் முகம்கொடுக்க முடியும் என்பதனை  உறுதிப்படுத்தும் எதிர்காலத்தை நாம்  விரும்புகின்றோம். “#BleedGood மூலம், நாம்  ஒரு தேவையினை மட்டும் தீர்க்கவில்லை அதோடுகூட  வலுப்படுத்துதல், உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நம்பிக்கை எனும்  தன்மைகளினை  அபிவிருத்தி செய்து வருகின்றோம்” என்று Selyn நிறுவனத்தின்  தொலைநோக்கு குணம் கொண்ட  அதன் இஸ்தாபகரான  Sandra Wadurangala   அவர்கள் குறிப்பிட்டார்.

#BleedGood என்பது வெறும் ஒரு முன்முயற்சித்  திட்டமாக இருப்பதனையும் கடந்து செல்கின்றது; இது பெண்களை மேம்படுத்தும் நோக்கோடு  வடிவமைக்கப்பட்ட ஓர் விடையம் மட்டும் அல்லாது விரிவான சுற்றுச்சூழல் அமைப்பின்  தூய்மையுடனும்  தொடர்புடையதுமாகும்.  இதன் முக்கிய இலக்கு புதுமையான Selyn மீள்பயன்பாட்டு  Pad கள் ஆகும்.   இது சர்வதேச தரநிலை களினைப்  பூர்த்தி செய்வதோடுகூட இரண்டு ஆண்டுகளுக்கு மாதவிடாய் ஆரோக்கியத் தீர்வுகளையும் வழங்குகின்றது.  இம்முன்னோடி முயற்சியானது பெண்களுக்கு ஏற்படக்கூடிய  மாதவிடாய் தொடர்பான சிக்கல்களான  நிதி மற்றும் உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், Seyln இன்நியாயமான வர்த்தக சமூக நிறுவன வலையமைப்பிற்குள் உள்ள கிராமப்புற கைவினைஞர்களுக்கு   வலுவூட்டம் செய்வதனையும்  நோக்கமாகக் கொண்டுள்ளது.

“மாதவிடாய் தொடர்பான  பிரச்னை என்பது  உலகெங்கிலும் வாழக்கூடிய எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையில் ஒரு இருண்ட  பகுதியாகும். அது  அவர்களின் கண்ணியத்தையும் அடிப்படை உரிமைகளையும் மழுங்கடிக்கச் செய்கின்றது.  இது பல்வகை அம்சங்களைக் கொண்ட  ஓர்  பிரச்சினையாகும், விரும்பியோ விரும்பாமலோ, இது முறையான சமத்துவமின்மை மற்றும் சமூக அவமதிப்புகளில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. இப்பரவலான அநீதியினை  எதிர்கொள்ள, Selyn நிறுவனத்தினை சார்ந்த நாம்  உறுதியாக இருக்கின்றோம்”. #BleedGood மூலமாக சகல பெண்களுக்கும் நாம்  நடைமுறையான  தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாது, மாற்றத்தினை ஏற்படுத்தி, அவர்களின் கைகளை ஆதரித்து வலுவூட்டம் செய்து ஆதரித்தல் போன்ற  முன்முயற்சித் திட்டங்களினை நாம் முன்னெடுத்து  வருகின்றோம்.  #BleedGood முன்முயற்சியினை நாம் உருவாக்கியுள்ளதோடு அதனை செயல் படுத்துவதத்திற்காக பல்வேறு கூட்டாளர்களுடைய ஒத்துழைப்பினையும் நல்கியுள்ளோம்.  இது இலங்கை முழுவதிலும் வாழக்கூடிய பெண்களுக்கு சமூகஒற்றுமை, மீண்டெழும் தன்மை,  மற்றும் வலுவூட்டம்  எனும் விடையங்களினை  அறிவூட்டல் மூலமாக, ஆதரித்துப் பேசுதல், மற்றும் நிலையான கூட்டுப் பொறுப்புணர்வு போன்ற  ஒரு எதிர்காலத்தை முன்நோக்கி பாதையினை நாம்  திறக்கின்றோம், அங்கே  எந்தவொரு  பெண்ணும் மாதவிடாய் தொடர்பான சிரமங்களினையோ அவமானங்களினையோ அனுபவிக்கப் போவதில்லை” என Selyn நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் அங்கத்தவரும் மற்றும் அதன் வர்த்தக மேம்படுத்தல் பிரிவின் பிரதானியுமான  Selyna Peiris அவர்கள் தெரிவித்தார்.

சட்டச் சேவைகள் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் (SRHR) ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்த அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து, அடித்தள சமூகத்தில் உள்ள  பெண்களுக்கு அத்தியாவசிய அறிவூட்டுதல், வழிகாட்டுதல் மற்றும் இன்னோரன்ன உதவிகளினை வழங்குவதற்காகவே  இம்முயற்சியானது  அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்குப் பயிற்சி அமர்வுகள், ஆலோசனைகள் மற்றும்  ஆதரித்துப் பேசுதல் போன்ற முயற்சிகள் மூலம், #BleedGood பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சிறார் பாதுகாப்பு  போன்ற முக்கியமான தலைப்புகளில் பெண்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் வலுவூட்டுதல் முயற்சிகளினை மேற்கொள்கின்றது, அதுமட்டும் அல்லாது அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வினை  மேம்படுத்த தேவையான உபாயவழிமுறைகள் என்பனவற்றினை அவர்களுக்கு வழங்குகின்றது.

#BleedGood-ஐ வித்யாசப்படுத்திக்  காட்டுவது  அதன்   open-source model அணுகுமுறையாகும், இது தொழில்நுட்ப அறிவு மற்றும் பாடத்திட்டங்கள் என்பனவற்றினைப் பகிர்ந்து கொள்கின்றது மற்றும் ஒத்துழைப்பிற்காக அழைப்பினையும்  விடுக்கின்றது.  இது இலங்கையில் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளினை  ஒழிப்பதில் தம்மை அர்ப்பணித்துள்ள சகல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் ஒத்துழைப்பினையும்  ஊக்குவிக்கின்றது. சமூகத்தின் தலையீடுகளினை இலகுவாக்குவதற்கும், நிலையான மாற்றத்தினை  ஊக்குவிப்பதற்கும் உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம்  இம் முன் முயற்சியில் இணைந்துகொள்ள  விரும்பும்  யாவருக்கும் Selyn நிறுவனமானது  ஒரு அன்பான அழைப்பினை  விடுக்கின்றது. 

Selyn சமூக நிதி போன்ற முன்முயற்சிகள் மூலம், நிறுவனமானது  அறிவூட்டல், ஆரோக்கியம்  மற்றும் பொருளாதார வலுவூட்டல்த் திட்டங்களினை ஆதரிக்கின்றது, அதுமட்டுமல்லாது அனைவருக்கும் நிலையான அபிவிருத்தி  மற்றும் சமூக நீதி போன்றவற்றினை  உறுதி செய்கின்றது.

Selyn இன் இஸ்தாபகரான Sandra Wanduragala  வினால் 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Selyn நிறுவனமானது ஓர்  இலாபநோக்கற்ற முயற்சியாண்மையாகும்.  இது பெண் கைவினைஞர்களின்  பூரண  மேம்பாடு, ஆரோக்கியமான  வேலையில் அவர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டினையும் உறுதி செய்கின்றது. இந்நிறுவனத்தின் முயற்சியாண்மைகளில் பிரதானமானது  “திறமைகளை மேம்படுத்துதல்” ஆகும், இது உடல்நலம், மாதவிடாய் கால ஆரோக்கியம், நிதி முகாமைத்துவம், தலமைதாங்கும் திறன் மற்றும் தொழில் முயற்சியாண்மை போன்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையினில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது மாதவிடாய் ஆரோக்கியப் பொருட்களின் அவசரத் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, #BleedGood எனும் முன்முயற்சியானது முதன் முதலில் உருவெடுத்தது. மாதவிடாய் கால ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் அது தொடர்பான விடையங்கள்  குறித்து விரிவான விழிப்புணர்வு அமர்வுகளுடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய Pad களின் விநியோகமும் இம்முயற்சியில்  உள்ளடங்கும்.

பெண்களின் சுகாதாரப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு அவசியம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x