Wednesday, October 16, 2024
Home » 2023: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அறிவிப்பு

2023: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அறிவிப்பு

by damith
February 13, 2024 7:15 am 0 comment

2023 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06க்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை (13) முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை ஒன்லைன் முறை மூலம் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம்.

http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக முறையீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x