Wednesday, May 15, 2024
Home » சேவையிலிருந்து அகற்றப்பட்ட 17 சொகுசு பஸ்கள் புனரமைப்பு

சேவையிலிருந்து அகற்றப்பட்ட 17 சொகுசு பஸ்கள் புனரமைப்பு

01 கோடி ரூபா செலவு, 99 கோடி ரூபா சேமிப்பு

by Gayan Abeykoon
February 1, 2024 9:54 am 0 comment

இலங்கை போக்குவரத்து சபையின் சுற்றுலா சேவைக்கு சொந்தமான 17 அதி சொகுசு பஸ்கள் புனரமைக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை  அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவின் ஆலோசனைக்கமைய இந்த பஸ்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

சொகுசு சுற்றுலா போக்குவரத்து சேவைக்கு சொந்தமான இரத்மலானை வளாகத்தில் புனரமைக்கப்பட்ட பஸ் வண்டிகளின்  திருத்தப்பணிகளுக்கு பத்து மில்லியன் ரூபாவுக்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்த பஸ்களில் ஒன்றை நெடுஞ்சாலைகளில் இயக்குவதன் மூலம் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்ட முடியும். அமைச்சர் கலாநிதி பந்துலு குணவர்தன, மேற்பார்வை அதிகாரியாக பொறியியலாளர் குஷான் வெகொடோபொலவை நியமித்ததுடன் இந்த பஸ்களை புனரமைக்கும் பொறுப்பையும் வழங்கினார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 19 மில்லியனாக இருந்த நிறுவனத்தின் வருமானம் இந்த ஜனவரிக்குள் 42 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், “இன்று இலங்கையின் முகாமைத்துவத் துறையில் புதிய முன்மாதிரியும் புதிய பெறுமதியும் சேர்க்கப்படும் நாள். சில காலமாக இடம்பெற்று வரும் திறமையற்ற முகாமைத்துவத்தினால் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவரை நியமித்துள்ளேன். மோசடி, ஊழல், முறைகேடுகள் அற்ற  வினைத்திறனான மற்றும் வினைத்திறனான இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் பொறுப்புடன், இ.போ.சவை  முறையான அரச சேவை நிறுவனமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டே இந் நியமனம் வழங்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் சரியான முறையில் பொதுமக்களுக்கு சேவையை வழங்கும் நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்றுவதே இலக்காக வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன், நாங்கள் இந்த இடத்துக்கு வந்தபோது, ​​பொதுநலவாய மாநாட்டுக்காக கொண்டு வரப்பட்ட இந்த மதிப்பு மிக்க  சொகுசு பஸ் வண்டிகள், எந்த தேவைக்கும் பயன்படுத்த முடியாத வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

உதிரி பாகங்கள், எஞ்சின்கள், இயந்திர பாகங்கள் இல்லாமை, அந்நிய செலாவணி பற்றாக்குறை போன்றவற்றை கருத்தில் கொண்டு, இந்த பஸ்களை புனரமைக்கும் பொறுப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொறியியல் துறையில் அனுபவம் வாய்ந்த குஷான் வேகொடபொலவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பஸ் வண்டிகளுக்கு  தேவையான உதிரி பாகங்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக சலுகை விலையில் பெற்றுக்கொள்வதற்காக நிறுவனங்களுடன் கலந்துரையாடினேன்  .

இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, 17 பஸ் வண்டிகளை நெடுஞ்சாலையில் இயக்கும் அளவுக்கு சீரமைக்க முடிந்திருப்பது அனைவரின் கூட்டு முயற்சியின் பலனாகும்.

தற்போது இந்த அதி சொகுசு பஸ் வண்டிகளின்  சந்தை பெறுமதி 600 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும். குறைந்த பட்சம் பத்து மில்லியன் ரூபா செலவில் இவ்வாறான பெறுமதி கொண்ட பஸ் வண்டிகளை புதுப்பிப்பதற்கு பங்களித்த அனைவருக்கும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனது பாராட்டை  தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சில நாட்களில் இ.போ.ச  யாப்பு இறுதி செய்யப்பட்டதன் பின்னர் நடைபெறும் மாநாட்டில் பங்களித்த அனைவருக்கும் விசேட கௌரவம் அளிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.”

இலங்கைபோக்குவரத்து  சபையின் தலைவர் லலித் டி அல்விஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக, சொகுசு சுற்றுலா போக்குவரத்து சேவையின் மேற்பார்வை அதிகாரி பொறியியலாளர் குஷான் வேகொடோபொல, அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் குஷான் தேவிந்த மற்றும் ஏனைய அதிகாரிகள், இ.போ.ச ஊழியர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT