Tuesday, May 14, 2024
Home » புதிய பட்டுப் பாதைக்கு பத்து வருடங்கள்: முடிவுகள் மற்றும் எதிர்பார்ப்பு வெளியீடு

புதிய பட்டுப் பாதைக்கு பத்து வருடங்கள்: முடிவுகள் மற்றும் எதிர்பார்ப்பு வெளியீடு

by damith
January 1, 2024 8:30 am 0 comment

சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதற்கு இணைந்ததாக, இத்திட்டத்தின் மூலம் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், ஆசிய முன்னேற்ற மன்றத்தினால் தொகுக்கப்பட்ட ‘புதிய பட்டுப்பாதையின் பத்தாண்டு முடிவுகளும் எதிர்பார்ப்புகளும்’ என்ற அறிக்கை அண்மையில் பத்தரமுல்லை வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

ஆசிய முன்னேற்ற மன்றத்தின் உறுப்பினர்கள் இந்த அறிக்கையை வெளியிடுவது குறித்து பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், மேலும் கருத்துகளை தெரிவித்த இலங்கை ​ேஜர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் வினோத் முனசிங்க, “சீனாவால் ஆரம்பிக்கப்பட்ட ‘பெல்ட் ரோட்’ அதாவது புதிய பட்டுப் பாதை திட்டத்திற்கு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. உலக வரலாற்றில் உலகம் முழுவதையும் உள்ளடக்கி ஒரே நாட்டினால் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு மற்றும் பிற சமூக-பொருளாதார வசதிகள் மேம்பாட்டுத் திட்டம்” என்று குறிப்பிட்டார். தற்போது உலகின் அனைத்துக் கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 155 நாடுகள் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளில் உள்ள சுமார் ஐந்து பில்லியன் மக்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் நாம் ‘மாவத்தக் தீரயென்’ அதாவது புதிய பட்டுப்பாதையின் ஆரம்பத்தால் குறைவான நன்மைகளையே அடைந்துள்ளோம்” என மேற்குலக அரசியல் விஞ்ஞான நிறுவனத்தின் அதிபர் கலாநிதி வருண சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

“இது மொத்த தேசிய உற்பத்தியில் 14வீதம் ஆகும். இந்த முயற்சியின் கீழ் கம்போடியாவில் செய்யப்பட்ட முதலீடுகள் முறையே அந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் 140 மற்றும் 60 வீதம் ஆகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவுடனான பொருளாதார மற்றும் வரலாற்று உறவுகளால் எமது நாடு பெற்றுக்கொண்ட நன்மைகளின் அளவு மிகவும் குறைவு” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, எமக்குக் கிடைத்தவை மிகவும் மெதுவான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டு, மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதை, கொழும்பு துறைமுக நகரத்தின் பணிகளுக்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். நாட்டின் அரசியல் ஸ்திரமின்மைக்கு எதிரான நிலை மற்றும் மேற்குலகின் நலனுக்காக நாட்டில் உருவாக்கப்பட்ட சீனத் தடையினால் இலங்கையில் குறைவான முதலீடுகளே பெறப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டிய வருண சந்திரகீர்த்தி “சீனக் கொலனி, சீனக் கடன்பொறி போன்ற போலிக் கருத்துகள் எமது நாட்டில் மிகவும் அதிகமாக இருப்பதைக் காணமுடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய பட்டுப்பாதையின் மூலம் சர்வாதிகார அரசு வலுப்பெறும் என்ற புதிய கட்டுக்கதை நமது நாட்டில் பரப்பப்பட்டு வருவதாகவும், ஆனால் அவ்வாறானதொரு நிலை உருவாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக மேற்கத்திய ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்ட எமது நாடு இனியும் இவ்வாறான அழிவுகளுக்கு பலியாகாது எமது சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பாதையின் ஊடாக அதிகூடிய பலன்களை நாம் பெற வேண்டும் எனவும் வருண சந்திர கீர்த்தி மேலும் தெரிவித்தார்.

இதன்போது, ​​ஆசிய முன்னேற்ற மன்றத்தின் உறுப்பினர்கள், இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் வினோத் முனசிங்க, மேலைத்தேய அரசியல் விஞ்ஞான நிறுவனத்தின் தலைவர் கலாநிதி வருண சந்திரகீர்த்தி, ஜகத் முனசிங்க, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பெர்சி சமரசிங்க, மீன்பிடித் துறைமுக வரையறுக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொதுமுகாமையாளர், கணனி பொறியியலாளர் மற்றும் ஊடகவியலாளர் சமன் விதுநேத் ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT