Home » மனக்கணித சர்வதேச போட்டியில் பங்குபற்ற தயாராகும் இலங்கை UCMAS மாணவர்கள்

மனக்கணித சர்வதேச போட்டியில் பங்குபற்ற தயாராகும் இலங்கை UCMAS மாணவர்கள்

by Rizwan Segu Mohideen
November 29, 2023 3:07 pm 0 comment

Abacus இனை அடிப்படையாகக் கொண்டு மூளை விருத்தி மற்றும் மனக்கணித ஆற்றலை வளர்க்கும் பயிற்சிநெறியை வழங்கும் உலகப்புகழ் பெற்ற UCMAS நிறுவனம் உலகில் 80 இற்கு மேற்பட்ட நாடுகளிலுள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் சர்வதேச மட்டப் போட்டியை நடத்தவிருக்கின்றது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை முழுவதும் UCMAS Abacus மூல பயிற்சி நெறியைப் பயிலும் மாணவர்களிலிருந்து திறமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 62 மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவுடன் இலங்கை UCMAS நிறுவனம் தயாராகி வருகின்றது. இந்த இளம் திறமையாளர்கள் 8 நிமிடங்களில் 200 கணக்குகளைத் துல்லியமாகவும் வேகமாகவும் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள்.

கடந்த காலங்களில் பல இலங்கை மாணவர்கள் தமது திறமைகளை இந்த அரங்கில் நிரூபித்துள்ளனர்.

இருப்பினும், இந்த ஆண்டு புதிய தலைமையின் கீழ், அதாவது நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை உலக அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இலங்கை UCMAS நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியும் தேசிய உரிமையாளருமான விஜய் சிவசங்கரின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இப்போட்டியில் பங்குபற்றும் ஒரு மாணவனின் தயாரான திருமதி ஜெகநாதன் அவரது மகனின் மீதான நம்பிக்ைகயை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

“UCMAS Abacus மூல கற்கைநெறி எனது மகனின் கணிதத் திறனை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாது அவனது தன்னம்பிக்ைகயையும் உயர்த்தியுள்ளது. அவன் UCMAS கற்கைநெறியைப் பயில ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை மட்டத்தில் மட்டுமே வெற்றிகளை ஈட்டிவந்தான். ஆனால், தற்போது பாடசாலை மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் வெற்றியீட்டியது மட்டுமன்றிச் சர்வதேச மட்டத்திலும் கால் பதித்துத் தன்னை நிரூபிக்கத் தயாராகின்றான்” என்றார்.

இலங்கை UCMAS நிறுவனம் இலங்கை முழுவதும் 50 இற்கு மேற்பட்ட கிளைகளுடன் 2500 இற்கு மேற்பட்ட மாணவர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. இது அண்மையில் கொழும்பில் BMICH இல் மிகவும் பிரமாண்டமான முறையில் UCMAS மாணவர்களுக்கான தேசிய மட்டப் போட்டியை நடத்தியிருந்தது. இப்போட்டியில் நாடு முழுவதுமிருந்து 2000 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக்கிண்ணங்களையும் பதக்கங்களையும் பெற்றிருந்தார்கள். தற்போது இந்த மாணவர்கள் தங்களது திறமைகள் மூலம் உலக அரங்கில் சாதனைகளைப் படைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT