Friday, May 31, 2024
Home » இந்திய கைத்தொழில் அமைச்சருடன் உயர்ஸ்தானிகர் மொரகொட சந்திப்பு

இந்திய கைத்தொழில் அமைச்சருடன் உயர்ஸ்தானிகர் மொரகொட சந்திப்பு

by damith
October 2, 2023 7:40 am 0 comment

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயலை (29) புது தில்லியில் உள்ள வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சில் வைத்து சந்தித்து பிரியாவிடைபெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது ​​உயர் ஸ்தானிகர் மொரகொட, அமைச்சருடன் அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான உரையாடல்களை நினைவு கூர்ந்தார். மற்றும் அவர் டெல்லியில் பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட ஆதரவிற்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரின் பங்களிப்புக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார். ETCA தொடர்பான அடுத்த (12வது) சுற்று பேச்சுவார்த்தை 2023 அக்டோபர் 30 முதல் நவம்பர் 01 வரை கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT