Wednesday, May 15, 2024
Home » கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘LORRAINE’

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘LORRAINE’

by Kalky Jeganathan
July 11, 2023 3:43 pm 0 comment

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான ‘LORRAINE’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (11) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

‘LORRAINE’என்பது ஒரு வான் பாதுகாப்பு பல்நோக்கு போர்க்கப்பல் ஆகும்.

142 மீட்டர் நீளம் கொண்ட ‘LORRAINE’என்ற கப்பலில் 154 பணியாளர்கள் வந்துள்ளனர்.

‘LORRAINE’என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் சேவியர் பாகோட் உள்ளார்.

கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு வரவேற்பு அளித்திருந்தனர்.
அதனையடுத்து, கப்பலின் தளபதி மற்றும் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

‘லோரெய்ன்’ என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் மாலுமிகள் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிடவும் பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பல் ஜூலை 15 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT