Saturday, June 1, 2024
Home » ‘Call of the Wild’: அழகிய யால தேசிய பூங்காவை ஆராயும் ஜீப் வண்டி பயணம் 2023

‘Call of the Wild’: அழகிய யால தேசிய பூங்காவை ஆராயும் ஜீப் வண்டி பயணம் 2023

by Rizwan Segu Mohideen
June 27, 2023 11:48 am 0 comment

The Jeep Club of Sri Lanka (JCSL) ஆனது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜீப் கிளப் எக்ஸ்பெடிஷன் 2023 இனை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு ‘Call of the Wild’ என பெயரிடப்பட்டிருந்தது. மிக ஆர்மான 20 பேர் கொண்ட JCSL உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று, கம்பீரம் கொண்ட யால தேசிய பூங்காவின் பிரமிக்க வைக்கும் நிலப்பகுதிகளில் சென்று, ஆய்வு சுற்றுலாவை மேற்கொண்டனர்.

இதன் முதல் நாளில் யால புளொக் 6 என அறியப்படும் லுணுகம்வெஹெர தேசிய பூங்கா மற்றும் யால புளொக் 5 ஆகிய அழகிய பிரதேசங்களை ஆராய்வதில் கடந்தது. தோடு, இதன் இரண்டாவது நாள், ஜீப் கிளப் எக்ஸ்பெடிஷன் ஆனது, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இனப் பல்வகைமையை கொண்ட யால புளொக் 1 இற்குள் கடந்தது. இங்கு, வனஜீவராசிகள் அதிகாரசபை மற்றும் JCSL இன் சிரேஷ்ட உறுப்பினர்களால் ஜீப் கிளப் உறுப்பினர்களுக்கு, இயற்கைக்கு இடையூறுகளை விளைவிக்காதிருப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றைப் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.

‘Call of the Wild’ எனும் இப்பயணம், Jeep 4×4 வாகனங்களின் வரிசையைக் காட்சிப்படுத்தியது. இதில் பிரபலமான Jeep Wrangler, பல்வகை Jeep Grand மற்றும் திறன் கொண்ட Jeep Cherokee ஆகியன உள்ளடங்குகின்றன.

ஜீப் கிளப் எக்ஸ்பெடிஷன் 2023 ஆய்வுச் சுற்றுலாவின் வெற்றி தொடர்பில் JCSL இன் தலைவர் ஹரின் டி சில்வா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எதிர்காலத்தில் மேலும் உற்சாகமான பயணங்களை JCSL ஏற்பாடு செய்யும் என அவர் தெரிவித்தார்.

ஜீப் உறுப்பினர்களைக் கொண்ட JCSL இன் நோக்கம், இயற்கை தொடர்பில் ஆர்வம் கொண்ட அதன் உறுப்பினர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதாகும்.

இலங்கையின் ஜீப் கிளப்பின் உறுப்பினரான ரொஷான் விஜயரத்ன இது தொடர்பில் குறிப்பிடுகையில்: “JCSL இன் உறுப்பினர் எனும் வகையில், யால தேசிய பூங்காவில் வனவிலங்குகளை பார்க்க கிடைத்த ஜீப் கிளப் எக்ஸ்பெடிஷன் 2023 இல் பங்கேற்றமை உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாகும். இதில் இலங்கையில் ஜீப் வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தரான DIMO விற்கு இவ்வேளையில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிகொள்கின்றேன்.” என்றார்.

The HOME for Jeep, (ஜீப்களின் இல்லம்) என அழைக்கப்படும் இலங்கையில் ஜீப் வாகனங்களுக்கான ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தரான DIMO, விரிவான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இப்பயணத்திற்கு வழங்கியிருந்தது. இப்பயணம் முழுவதும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தடையற்ற மற்றும் இடயூறின்றிய அனுபவத்தை இதன் மூலம் அது உறுதி செய்தது. அத்துடன் ஜீப் செயற்றிறன் மையம் மூலம் அசைக்க முடியாத விற்பனைக்குப் பின்னரான சேவையையும் வழங்குகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT