பாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல் | தினகரன்

பாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் நாடு கடத்தல்

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உட்பட 6பேர் இன்று (22) காலை நாடு கடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

UL226 என்ற விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்று விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி, துபாயிலுள்ள ஆடம்பர ஹோட்டலொன்றில் மாகந்துரே மதூஷ் உட்பட 31 பேர் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 


Add new comment

Or log in with...