நீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம் | தினகரன்

நீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்

நீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்-Poison Mixed Water-Rumor-False News

நீருடன் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கிரிபத்கொடை, ஜாஎல, களனி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீரை வழங்கும் தாங்கியில் விஷம் கலந்திருப்பதாக, அப்பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு பொலிஸார் அறிவித்திருப்பதாக பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அவ்வாறு வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...