இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு | தினகரன்


இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு

இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு-Police Curfew Imposed From 8pm-4am

இன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, நேற்று (21) பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (23) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...