ஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு | தினகரன்


ஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு

ஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு-Gnanasara Appeal Against His Verdict

 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரரை நிரபராதி என தெரிவிக்குமாறு கோரி மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் சட்டத்தரணியால், இன்றையதினம் (15) ஹோமாகம மேல்நீதிமன்றில் குறித்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில், ஞானசார தேரருக்கு 06 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், தற்போது மேன்முறையீடு செய்துள்ளதால், சிறையில் கடின பணிகள் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றையதினம் (14) அவர் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குமாறு கோருவதாக, சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

 


Add new comment

Or log in with...