வெற்றிக்கு என்ன காரணம்? மனம் திறந்தார் ஸ்வெரவ்! | தினகரன்

வெற்றிக்கு என்ன காரணம்? மனம் திறந்தார் ஸ்வெரவ்!

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றதற்கு ஆரம்பத்தில் சில போட்டிகளைத்தவிரத்தமையே காரணம் என அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினில் நடைபெற்ற மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின்இறுதிபோட்டியில், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், டொமினிக் த்யீம்மை 6--4, 6--4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “எனது வாழ்வில் மிகப்பெரியடென்னிஸ் தொடரை விளையாடியுள்ளேன். ‘ஏ.ரீ.பி. வேர்ல்ட் டூர் மாஸ்டர்ஸ் 1000’ கிண்ணத்தைவென்றதில் மகிழ்ச்சி. இது எனது மூன்றாவது கிண்ணம் என்பதுடன், களிமண் தரையில் இரண்டாவது

கிண்ணமாகும்.இந்த வெற்றியின் மூலம் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதே உத்வேகத்துடன், ரோம்தொடரையும் எதிர்கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

எனக்கு இந்த தொடர் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது, நான் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள்விளையாடியுள்ளேன்.

ஆரம்பத்தில் சில போட்டிகளைத் தவிர்த்தமையினால், அது இந்த கிண்ணத்தை வெற்றி கொள்ள உதவியாக இருந்தது” என கூறினார். 


Add new comment

Or log in with...