கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதற்கமைய, கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை ஒரு கிலோகிராம் ரூ. 290 ஆக குறைக்கப்பட்டுள்ளது.இதுவரை கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை ரூ. 395 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.