8ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி: முதன் முறையாக ஜனாதிபதியானார் ரணில் விக்ரமசிங்க

- 52 மேலதிக வாக்குகளால் முதலிடம்
- ரணில் விக்ரமசிங்க - 134 வாக்குகள்
- டளஸ் அழகப்பெரும - 82 வாக்குகள்
- அநுர குமார திஸாநாயக்க - 03 வாக்குகள்

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.

அந்த வகையில் இதுவரை பல முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, முதன் முறையாக இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம், ஒரு வருடத்திற்கும் மேலான இழுபறியின் பின்னர், பாராளுமன்றம் நுழைந்த ரணில் விக்ரமசிங்க, அந்த ஒரேயொரு ஆசனம் மூலம் 9ஆவது பாராளுமன்றத்தில் பிரதமராகவும், அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதியாகவும், அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கையின் 8ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகவும் தெரிவாகியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள அவரது ஆட்சிக் காலத்திற்காக, இன்றையதினம் (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பின் அடிப்படையில், இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் ஸ்திரமற்ற தன்மையைத் தொடர்ந்து, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த மே 09ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால், பாராளுமன்றத்தில் ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனத்தின் மூலம் பாராளுமன்றம் நுழைந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி, அதன் பின்னர் ஜூலை 13ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவு சென்றார்.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் கடமைகளை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14ஆம் திகதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வறிதான ஜனாதிபதி பதவிக்கு 1981ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைய, புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நேற்றையதினம் (19) வேட்புமனு கோரப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகப்பெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இன்று (20) ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தலின் வாக்களிப்பில்,

  • மொத்தமாக 223 பேர் வாக்களித்திருந்தனர்
  • 4 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன
  • 2 பேர் வாக்களிக்கவில்லை (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சி உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்)

  • செல்லுபடியான வாக்குகள் 219
  • ரணில் விக்ரமசிங்க - 134 வாக்குகள்
  • டளஸ் அழகப்பெரும - 82 வாக்குகள்
  • அநுர குமார திஸாநாயக்க - 03 வாக்குகள்

இரண்டாமிடம் பெற்ற வேட்பாளரின் வாக்குகளை விட 52 மேலதிக வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன்23ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டார்.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமராகப் பதவிவகித்தார்.

1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அவர் அப்போது கடமையாற்றினார். 28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற கபினட் அமைச்சு பதவிகளை வகித்தார்.

1989 மார்ச் 06 முதல் 1993 மே 07 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய விக்ரசிங்க 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவிவகித்துள்ளார்.

அவர் முதன்முறையாக 1993 மே மதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994 ஆகஸ்ட் 19 வரை அந்த பதவியை வகித்தார். இவர் இரண்டாவது தடவையாக 2001 டிசம்பர் 09ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதிவரையும், மூன்றாவது தடவையாக 2015 ஜனவரி 09ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி வரையும், நான்காவது தடவையாக 2015 ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2018 ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிவரையும், ஐந்தாவது தடவையாக 2018 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 21ஆம் திகதி வரையும் பிரதமராகக் கடமையாற்றியிருந்தார்.

இதன் பின்னர் கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அம்மாதம் 12ஆம் திகதி மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியைவகித்துவரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய கடந்த 14ஆம் திகதி முதல் பதில் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


There is 1 Comment

தயவுசெய்து முஸ்லீம் வாசகர்களுக்கு இது அன்பானது. அல்ஹம்துலில்லாஹ், கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பின்னர் அரசியலமைப்பின் படி புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்யும் நடவடிக்கையில் இருந்து நான் இந்த உண்மையை எழுதுகிறேன். மீடியா சேனல் ஒளிபரப்பியது. இன்று முஸ்லீம்களின் தனிமையான "குரல்" - முஸ்லீம் குரல்" அலசல் மற்றும் கணிப்பு எல்லாம் வல்ல அல்லாஹ்வால் உண்மையாக்கப்பட்டுள்ளது முஸ்லீம் குரல்" மற்றும் எமது சமூகத்தின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். முஸ்லிம்களாகிய நாம் இலங்கையின் அரசியல் களத்தில் அங்கீகாரம் பெறக்கூடிய சக்தியாக இருக்கின்றோம், எமது "மாத்ருபூமியா" அனைத்து அரசியல் மற்றும் இனவாத சதிகளில் இருந்தும் எம்மை பாதுகாக்க பாராளுமன்றத்தில் பலமும் குரலும் இன்ஷா அல்லாஹ் கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களிலும் குறிப்பாக மேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் போன்றவற்றில் அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும். முஸ்லிம் வாக்கு வங்கியை ஒன்றிணைத்து அவர்களை ஒன்று திரட்டி "புதிய முஸ்லிம் அரசியல் கலாச்சாரத்தை" உருவாக்க வேண்டும். நேர்மையும் நேர்மையும் கொண்ட ஒரு அரசியல் சக்தியை உருவாக்கும் கலாச்சாரமாக அது இருக்க வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் அல்ல. இந்த அரசியல் சக்தியானது 2024 இல் எமது முஸ்லிம் பிரதிநிதிகளை பங்காளிகளாகக் கொண்டு உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தை ஆதரிக்க முடியும், இன்ஷா அல்லாஹ். மேற்கூறிய இலக்குகளை அடைய, அனைத்து முஸ்லிம் முற்போக்காளர்களும் அல்லது மற்றவர்களும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான புதிய தலைமையின் கீழ் "கன்வீனர்" என்ற "ஒற்றுமைக்கான கூட்டத்தை" உடனடியாக அழைப்பது அவசியம், இன்ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ். இந்த பணியில் பல முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் உங்களுடன் இணைந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். "முஸ்லிம் குரல்" புதிய அரசியல் பயணத்தில் உங்களுடன் பங்காளியாக இருக்க தயாராக உள்ளது இன்ஷா அல்லாஹ். எனது 53 வருட அரசியல் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பின் போது "முஸ்லிம் குரல்" அமைப்பின் அழைப்பாளராக நான் எனது அரசியல் சித்தாந்தத்தை மாற்றவில்லை (SLFP/SLPP பிரமுகர்) எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ தனிப்பட்ட நலன்களுக்காக கட்சி மாறவில்லை அல்லது ஊழலில் ஈடுபடவில்லை அல்ஹம்துலில்லாஹ். . ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அரசியல் மீட்பர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், ஜனாதிபதிகள் தங்களை "சுத்தமாக" காட்டிக் கொள்வதையும், ஆனால் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக முக்கியமான அரசாங்க நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் தங்கள் சகோதரர்களை நியமிப்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். நாம் பொது/அரசியல் சேவைகளில் ஈடுபடும்போது நேர்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும், அர்ப்பணிப்புடனும், கடவுள் பயத்துடனும் இருக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். இந்த பிரபலமான தமிழ் இணைய ஊடகத்தின் அன்பர்கள் மேலே எழுதப்பட்டதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன், இன்ஷா அல்லாஹ். நான் ரணிலின் ரசிகன் அல்ல, ஆனால் இன்ஷா அல்லா என்ற யதார்த்தத்தை நான் ஆதரித்தேன். ரணிலின் கீழ் பிரதமர் பதவிக்கு டெனிஷ் குணவர்தனவை நான் கடுமையாக ஆதரித்தேன். அவ்வாறு செய்தவர்களில் நானும் ஒருவன் என்பதுடன், தினேஷ் குணவர்தனவை ரணிலின் கீழ் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். இந்த முன்மொழிவை எம்.இ.பி எனக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புக்கொண்டார். நூர் நிசாம் - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், "முஸ்லிம் குரல்" அழைப்பாளர், தேசப்பற்றுள்ள குடிமகன்.

Add new comment

Or log in with...