20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை | தினகரன்

20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை

பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர் மனம் திறந்து பேச்சு

20 ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், 20ஆவது  திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனைக் குறப்பிட்டுள்ளார்.

ஏறாவூரில் நேற்று இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், 20 ஆவது திருத்த சட்டமூலம், இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, 20 ஆவது திருத்தம் தொடர்பில் பொறுமையாக செயற்பட்டு, இறுதி நேரத்திலேயே சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்திற்கு சிறுபான்மை கட்சிகள் ஆதரவு வழங்கிய போதிலும், நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களை ஏமாற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


There is 1 Comment

அரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர், இன்ஷா அல்லாஹ். ஒன்றுக்கு மேற்பட்ட எஸ்.எல்.எம்.சி (SLMC) எம்.பி.க்கள் 20 வது, திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை இந்த ரவூப் ஹக்கீம் அறிவார். பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் இதில் மிக முக்கியமான நபராக இருப்பார். எஸ்.எல்.பி.பி (SLPP) தலைவர்கள் இதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆனால் SLMC, முஸ்லீம் வாக்காளர்களையும் சமூகத்தையும் ஏமாற்றுவதற்காக ஒரு "ஏமாற்றும் அரசியல் நாடகத்தை” அவர்கள் செய்கிறார்கள்.  இதைச் செய்வதன் மூலம், 20 வது, திருத்த மசோதாவை ஆதரிக்க ஒரு கட்சியாக அரசாங்கம் எஸ்.எல்.எம்.சியை (SLMC) அழைக்கும் என்று ரவூப் ஹக்கீம் நம்பலாம். பின்னர் அவர் தனக்கும் அவரது கைக்கூலிகளுக்கும் கூடுதல் நன்மைகளை கோரலாம். இந்த முனாஃபிக் முஸ்லீம் அரசியல் தலைவரிடமிருந்து கோதபயாவும் மஹிந்தாவும் கசப்பான பாடம் கற்றுக் கொண்டுள்ளனர். இனி அவரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், முஸ்லீம் எம்.பி.க்களும் 20 க்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். இது முஸ்லீம் அரசியல் ஆர்வம் சமூகத்திற்கு செய்யக்கூடிய சிறந்த அரசியல் தந்திரமாக இருக்கலாம். அவர்களுக்குத் தேவையான 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் பெறும். சில தமிழ் எம்.பி.க்களும் ஆதரவாக களத்தில் இறங்குவார்கள் என்று கூறினார். நாங்கள் தோல்வியுற்றால், எஸ்.எல்.எம்.சி (SLMC) மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் காரணமாக முஸ்லீம்களாகிய நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுவோம். Noor Nizam – Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

Add new comment

Or log in with...