முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு | தினகரன்


முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் பேசியிருக்கின்றோம். ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தீர்க்கின்ற பாரிய பொறுப்பு தமது தரப்பிற்கு இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.  

கல்முனைக்கு பாதகமில்லாமல் சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவது தொடர்பில் கட்சித் தலைமைமீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போக மாட்டாது என்று கூறியுள்ள அவர்,சமூகத்துக்கு தேவையான வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

தேசிய காங்கிரஸ் கட்சி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.  

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்,  

முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்து ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பில் கட்சித் தலைமை மீதிருக்கின்ற நம்பிக்கை வீண்போக மாட்டாது.  

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் எம்முடன் மீளிணைவதை மனதார வரவேற்கிறேன். கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களான இவர்கள் எதிர்காலத்தில் கட்சியை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிறது.  

நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடைபெறும் இந்த மீளிணைவானது தனிமனிதனை விடுத்து, சமூகத்தை பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். இப்போது எல்லோரும் ஒன்றுசேர்ந்து உத்வேகத்துடன் கட்சியை வழிநடாத்த வேண்டும்.  

தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்பதற்காக நாங்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றோம்.

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளரிடம் பேசியிருக்கின்றோம். ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தீர்க்கின்ற பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.  

சமூகத்துக்கு தேவையான வேட்பாளர் ஒருவரை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம். துடிப்பான இளம் ஜனாதிபதியை கொண்டுவருவதற்கான தேர்தல் பிரசாரப் பணிகளில் அனைவரும் பங்களிப்புச் செய்யவேண்டும். எதிர்வரும் 16ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு எங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.   


There is 1 Comment

What did Rauf Hakeem and the SLMC do till now on the land issues of the Muslims in the East? Is this not a political "gimmick" by Rauf Hakeem to "DUPE" the Muslim voters in the East and t see that they will vote Sajith. The Muslims are so frustated with the SLMC and the UNP/Sajith group that they are moving towards voting the JVP, which Rauf Hakeem has already named as the "NEW TREND" - "Muslimgal JVPikku vaakkualippathu MOHAMAGA aagivittahu". Noor Nizam - "Convener "The Muslim Voice".

Add new comment

Or log in with...