17
கல்வி அமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கிளை ஆண்டுதோறும் நடாத்தும் போட்டிகளில் அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி சிங்கள போட்டித் தொடரின் பேச்சுப்போட்டியில் அநுராதபுரம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவியான தரம் 06இல் கல்வி கற்கும் எம். எஸ். சஸ்பா என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தை சுவிகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் இதே பாடசாலை தரம் 09 இல் கல்வி கற்கும் இவரின் சகோதரி எம்.எஸ். ஹர்ஷா சிங்கள மொழி பேச்சு போட்டியில் பேசும் திறன் திறமைச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.இவர்கள் இருவரும் எஸ்.ஏ.எம். சியாம் (ஆசிரியர்), அஸ்மிகா சுல்தான் (ஸ்ரீலங்கா டெலிகொம்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்விகளாவர்.
(திறப்பனை தினகரன் நிருபர்)