இலங்கையிலுள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகராலயம் மாலைதீவின் குடியரசு தினத்தை முன்னிட்டு ‘மாலைதீவுகள் ஊடாக ஒரு காட்சிப் பயணம்’ என்ற தலைப்பில் பிரபலமான மாலைதீவு கலைஞர் அப்துல்லா பாயிஸின் கலைக் கண்காட்சியொன்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.
ஹோட்டன் பிளேஸ், கொழும்பு 7., ஜே.டி.ஏ. பெரேரா கலையரங்கில் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் தலைமையில் இந்நிகழ்வு திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தீபா லியனகே கண்காட்சியை திறந்து வைத்தார்.
மாலைதீவின் வரலாறு மற்றும் சமகால நிலப்பரப்புகள், அதன் கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை கண்காட்சியில் காணப்பட்டனர்.
இராஜதந்திரிகள், தூதரக ஊழியர்கள், மாலைதீவு கலைஞர் அப்துல்லா பாயிஸ் மற்றும் அழைப்பாளர்கள், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(ருஸைக் பாரூக்)