நாட்டில் மருந்தாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பெரும் எண்ணிக்கையான மருந்தகங்கள் மூடப்படும் அவதானம் நிலவுவதாக தேசிய மருந்தாளர் சங்க தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்தார்.பெல்மதுளையில் அமைந்துள்ள தேசிய மருந்தாளர் சங்க காரியாலயத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக மருந்தாளர்கள் மருந்தகங்களில் நிரந்தரமாக கடமையாற்றுவதற்கு தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.
இதனால் எதிர்காலத்தில் மருந்தகங்கள் (பாமசிகள்) மூடப்படும் அவதானம் நிலவுகின்றது. நாட்டில் 800 மொத்த விற்பனை மருந்தகங்களும் 5100 சில்லறை மருந்தகங்களும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)