உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டியாளர்களின் பங்குபற்றலுடன் நெக்ஸ்ட் ஜென் ஹொக்கி முன்னேற்ற கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் தலைசிறந்த விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொண்ட ப்ரிமியர் லீக் போட்டியில் பங்குபற்றிய இலங்கை இராணுவ ஹொக்கி குழுவினர் நேற்று (12) இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவை சந்தித்தனர்.
இந்த போட்டி முழுவதும் இலங்கை இராணுவ ஹொக்கி அணி சிறந்த ஆட்டத்திறனுடன் போட்டியிட்டு, இறுதிப் போட்டியில் விமானப்படை ஹொக்கி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றது.
இப்போட்டியில் வெளிநாட்டு வீரர்களுடன் ஏனைய அணிகள் போட்டியிட்டதுடன், இராணுவ ஹொக்கி அணி உள்நாட்டு வீரர்களுடன் மட்டும் போட்டியிட்டு சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இராணுவத் தலைமையகத்திற்கு சம்பியன் கிண்ணத்துடன் வருகை தந்த ஹொக்கி அணிக்கு இராணுவத் தளபதி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சாதனையைப் பாராட்டி, வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி மற்றும், விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இராணுவ விளையாட்டு பணிப்பாளர், இராணுவ ஹொக்கி கழக தலைவர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.