தேசிய மக்கள் சக்தியினராகிய எம்மை இனி யாராலும் அசைக்க முடியாதெனவும் பலதரப்பட்ட அவமானங்கள், அவதூறுகள், ஏமாற்றங்களை தாங்கிக்கொண்டு பல வருடங்களாக நம்பிக்கையுடன் மேற்கொண்ட நீண்ட பயணத்தின் வெற்றியை தற்பொழுது தாம் அடைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அருண் ஹேமச்சந்ரா தெரிவித்தார்.
திருகோணமலை, உவர்மலையில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, இதனை தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு வெளிவரும் வரை பெரும் தயக்கம் இருந்தது. இம்முறையும் மக்கள் எம்மை ஏமாற்றி விடுவார்களா? சரி வருமா? இல்லையா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் இறுதியில் மக்கள் எம்மீது கொண்டிருந்த உயர்ந்த நம்பிக்கை வெற்றியாக வெளிப்பட்டது. இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்தின் பிரகாரம் மக்கள் எம்மை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இது எமக்கு கிடைத்த பாரிய அரசியல் ரீதியான வெற்றியாகும்.
இன்று மக்கள் எம்மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகளுக்கு கடுகளவேனும் பாதகமின்றி நடக்கும் கடமை எமக்குண்டு.
திருகோணமலை தினகரன்