அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றி என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
காரைதீவில் நேற்றுமுன்தினம் (10) உரையாற்றும்போது இதனை தெரிவித்த, இலங்கைத் தமிழரசு கட்சியில் திகாமடுல்ல தேர்தல் தொகுதி போட்டியிடும் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,
நாம் எமது பிரதிநிதித்துத்தை சிங்களம் அல்லது முஸ்லிம் மக்களிடமிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் எமது பச்சோந்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது.
காரைதீவு மண்ணிலிருந்து மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த காரைதீவு மண்ணில் நான் செய்த சேவைகளைப் போன்று யாரும் செய்திருக்க மாட்டார்கள்.
நாம் உண்மையான நேர்மையான அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். எனவே, யாருக்கும் பயப்பட போவதில்லை. ஒருபோதும் பயமும் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் உடைத்து எறிந்து காரைதீவு மண்ணையும் எல்லையையும் மக்களையும் பாதுகாப்பேன். அதேபோன்று அம்பாறை மாவட்ட தமிழ் மண்ணையும் மக்களையும் பாதுகாப்பேன் என அவர் தெரிவித்தார்.
காரைதீவு குறூப் நிருபர்