கடந்த 70 வருட காலமாக தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவோம் என அழகு தமிழில் சொற்சமர் செய்து, பேச்சாற்றலால் மக்களை வசீகரித்து மக்களின் ஆணையுடன் பாராளுமன்றம் சென்றவர்கள், தமிழ் மக்களின் கல்வி, சமூக, பொருளாதார கட்டமைப்பை உயர்த்துவதற்காக செய்த மகத்தான சேவைகள் என்ன? என ஐ.ம.ச. வின் மட்டு. மாவட்ட வேட்பாளர் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,மேலும் குறிப்பிடுகையில்.
இந் நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் வாழ்வியலை சீர் செய்யவும் அவர்களின் பொருளாதார நிலைகளை மேம்படுத்தவும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசியவாதிகள் செய்த சேவைகள் என்னவென்று கேட்டால், அதற்கான விடை பூச்சியமாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
துறைநீலாவணை நிருபர்