இந் நாட்டை இதுவரைக் காலமும் ஆட்சி செய்து வந்தவர்களதல் மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான ஊழல்கள் இன்றைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாவட்ட வேட்பாளர் வனிதா செல்லப்பெருமாள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பின்போது இதனை தெரிவித்த வனிதா, மேலும் குறிப்பிடுகையில்,
இதுவரைக் காலமும் நமது நாட்டு மக்கள், ஊழல்வாதிகளையே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்தார்கள்.
அவர்கள் தம்மையும், தமது பொருளாதாரத்தையும் வளர்த்துக்கொண்டார்கள். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
நாட்டில் பெண் சமூகத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அனுபவித்து வரும் கஷ்ட நஷ்டங்களை தோழர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்கறிவார்.
வீண் விரயங்கள் ஒழிக்கப்பட்டு, சாதி, இன, மத, பேதமின்றி இந் நாட்டு மக்கள் சம உரிமையுடன் வாழும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே ஜனாதிபதி அநுர குமாரவின் நோக்கமாகும் என வேட்பாளர் மேலும் தெரிவித்தார்.
(மட்டக்களப்பு சுழற்சி நிருபர்)