மக்கள் தமது பெறுமதியான வாக்குகளை வீணடிக்காது மக்களின் தேவையறிந்து சேவையாற்றும் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டுமென சுயேட்சைக் குழு 24 வேட்பாளர் ஐ.யோகநாதன் தெரிவித்தார்.
மன்னார் பச்சிராபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களின் தேவையறிந்து சேவையாற்றும் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். அதைவிடுத்து வெறுமனே நகரத்துக்காகவும் ஒரு பக்கம் சீமெந்துக்காகவும் நமது பெறுமதிவாய்ந்த வாக்குகளை வீணடிக்கக் கூடாது.
மேலும் இன்று மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்கியிருக்கும் நிலையில் திடமான கொள்கையோடு இருப்பவர்களைக் கண்டறிந்து தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போல வடக்கிலும் புதிய முகங்களை பாராளுமன்றம் அனுப்புவது காலத்தின் தேவை என அவர் தெரிவித்தார். இதற்கு பொருத்தமான சுயேச்சைக் குழு 24 உதைபந்து சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.