Saturday, December 14, 2024
Home » வன்னியில் ஜ.த.தேசியக் கூட்டணியே பலமான கட்சி என்கிறார் சிவசக்தி ஆனந்தன்

வன்னியில் ஜ.த.தேசியக் கூட்டணியே பலமான கட்சி என்கிறார் சிவசக்தி ஆனந்தன்

by Gayan Abeykoon
November 12, 2024 1:04 am 0 comment

வன்னில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே பலமான கட்சியாகும்.  அதுவே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வன்னியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது இங்கு போட்டியிடுகின்ற கட்சிகளை விட அதிகூடிய வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இன்று தேர்தல் களத்திலுள்ள கட்சிகளில் பலமான கட்சியாகவும், கூட்டணியாகவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே உள்ளது. கடந்த காலங்களில் அனைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பயணித்தனர். எனினும் அக்கட்சி இன்று நிலைகுலைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களுக்காக இன்று இருக்கக்கூடிய மாற்றுத் தெரிவு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே. மக்களின் பல பிரச்சினைகள் இங்கு தீர்க்கப்படவில்லை. தங்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த ஒரு தரப்பும் முன்வரவில்லை என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

புதிய அரசாங்கம் சோசலிசம் சமத்துவம் என்ற கொள்கையை முன்னிறுத்தி ஆட்சியை முன்னெடுக்கிறது. இது சிங்கள மக்களுக்கு பொருத்தமாகவிருக்கும். தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று.

எமக்கு நீண்டகால பிரச்சினை உள்ளது. சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ச்சியாக எமது மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான ஒரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றார்.

(வவுனியா விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT