Saturday, December 14, 2024
Home » ஊடகவியலாளர்கள் நலனுக்காக ஒத்துழைப்புகளை வழங்குவேன்

ஊடகவியலாளர்கள் நலனுக்காக ஒத்துழைப்புகளை வழங்குவேன்

கல்முனையில்- வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா

by Gayan Abeykoon
November 12, 2024 1:03 am 0 comment

‘ஊடகவியலாளர்களின் நலன்களைப் பேணும் திட்டத்தை முன்மொழிந்து அவர்களை தொழில்ரீதியாக வலுப்படுத்துவதற்கு முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவேன்’ என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது, “காலாகாலமாக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் நாட்டுக்கும் பல்வேறு சேவைகளை செய்து வருகின்ற ஊடகவியலாளர்கள் தங்களது கணினி கருவிகள் மற்றும் புகைப்படக் கருவிகள் உட்பட சகல தேவைகளையும் பூரணமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் போதுமான வருமானம் அற்றவர்களாக காணப்படுகின்றனர். அவர்கள பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதை நான் அறிவேன்.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது உ​ைடமைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. கடந்த ஆட்சிக் காலங்களில் ஊடகத்துறையை ஜனநாயக அடிப்படையிலே செய்வதற்கு ஊடகத்துறையினருக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்பட்டது.

இந்நிலையை மாற்றி ஊடகவியலாளர்களுக்கு போக்குவரத்துக்கான மோட்டார் சைக்கிள் வழங்குதல், காப்புறுதித் திட்டம், அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான பல்வேறு திட்டங்களை முன்மொழிவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஊடகவியலாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளையும் உணர்ந்தவனாக செயல்படுவேன்” என்றார்.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT