கசானில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது, உலக அமைதி மற்றும் செழுமைக்கான புதிய சகாப்தத்தைத் திறந்து வைத்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா, ஈரான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களை இந்த உச்சிமாநாடு ஒன்றிணைத்தது: ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்’ என்ற தொனிப் பொருளில் மாநாடு நடைபெற்றது.
உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் இரண்டு அமர்வுகளில் உரையாற்றினார்.மோதல்கள், பாதகமான காலநிலை விளைவுகள் மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் போன்ற பல உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் கூட்டம் நடைபெறுவதை அவர் வலியுறுத்தினார்.
பிரிக்ஸிலிருந்து (BRICS) அதிக எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது.இந்த பிரச்சினைகளை திறம்பட தீர்க்க மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை தொடர்பிலும் எடுத்துரைத்தது. மேலும், பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான மாநாட்டை உடனடியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை இந்திய பிரதமர் வலியுறுத்தினார். உலகளாவிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்களுக்கு பிரிக்ஸ் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.
முதலில் “பிஆர்ஐசி” என்று அழைக்கப்பட்ட கூட்டணி, பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவால் 2006 இல் நிறுவப்பட்டது.பிரிக்ஸ்( BRIC) (பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா) நாடுகளின் தலைவர்கள் முதல் முறையாக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2006ஜூலை மாதத்தில் G8 உச்சிமாநாட்டின் போது சந்தித்தனர்.
சிறிது காலத்திற்குப் பிறகு, 2006செப்டம்பரில், முதலாவது பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் இந்த அமைப்பு ஒழுங்கமைக்கப்பட்டது. இது நியூயார்க் நகரில் ஐ.நா சபையின் பொது விவாதத்தின் போது கூடியது. தொடர்ச்சியான உயர்மட்டக் கூட்டங்களுக்குப் பிறகு, முதலாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு2009 ஜூன் 16 ஆம் திகதி றரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கில் நடைபெற்றது.
2010 செப்டம்பரில் நியூயார்க்கில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா முழு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அது பிரிக்ஸ் (BRICS) என மறுபெயரிடப்பட்டது. இதன் விளைவாக,2011 ஏப்ரல் 14 ஆம் திகதி சீனாவின் சான்யாவில் நடந்த 3 ஆவது BRICS உச்சி மாநாட்டில் தென்னாப்பிரிக்கா கலந்துகொண்டது.
இந்த கூட்டாண்மையானது வளரும் நாடுகளின் செல்வாக்கை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது . உலகளாவிய நிர்வாகத்தில் மேற்கத்திய சக்திகளுக்கு ஒரு சமநிலையை வழங்குகிறது. BRICS குழு, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நான்கு புதிய உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இப்போது விரிவடையும். BRICS இன் மொத்த உறுப்பினர் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா, ஈரான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஒன்பது நாடுகளை உள்ளடக்கியது.
உலக மக்கள்தொகையில் சுமார் 45% மற்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 26% என பல ஆண்டுகளாக BRICS நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரங்களாக உள்ளன. உலகின் முதல் 10 முன்னணி பொருளாதாரங்களில் இந்தியாவும் சீனாவும் உள்ளன. இரு நாடுகளும் BRICS நாடுகளில் முதல் மற்றும் இரண்டாவது பெரிய பொருளாதாரங்கள் ஆகும்.
உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் பங்கு 16.8%, அதைத் தொடர்ந்து இந்தியா (3.4%), பிரேசில் (2.1%), ரஷ்யா (1.9%), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (0.5%), எகிப்து (0.4%), ஈரான் இஸ்லாமிய குடியரசு (0.4%) ),தென் ஆப்பிரிக்கா (0.4%) மற்றும் எத்தியோப்பியா (0.2%) ஆகும்.ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கலாச்சாரம் மற்றும் மக்கள் பரிமாற்றம் ஆகிய மூன்று தூண்களின் கீழ் முக்கியமான பிரச்சினைகளை ஆராய பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. எத்தியோப்பியா, ஈரான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்டவை உலகளாவிய மசகு எண்ணெய் உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக 30% பங்களிக்கின்றன.
உச்சி மாநாட்டின் போது, சீன மக்கள் குடியரசு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் மோடி கலந்துரையாடினார். எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் அமைதியை நிர்வகிப்பதை மேற்பார்வையிடவும், எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய்வதற்காகவும் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைக்கான விசேட பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பார்கள் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இரு அண்டை நாடுகளாகவும், பூமியில் உள்ள இரண்டு பெரிய நாடுகளாகவும் உள்ள இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் இணக்கமான இருதரப்பு உறவுகள் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.
மோடியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தனர்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியையும் பிரதமர் மோடி இதன்போது சந்தித்தார்.