Saturday, December 14, 2024
Home » அப்பா மீது பாசத்தை வெளிப்படுத்திய சுஹாசினி.. விவஸ்தை இல்லாமல் கமெண்ட் செய்த இணையவாசி

அப்பா மீது பாசத்தை வெளிப்படுத்திய சுஹாசினி.. விவஸ்தை இல்லாமல் கமெண்ட் செய்த இணையவாசி

by damith
November 4, 2024 6:00 am 0 comment

இணையம் வளர்ந்து விட்ட பின்னர் இணையவாசிகள் வேகமாக இருக்கின்றோம் என காட்டிக் கொள்ள, சில விவஸ்தை கெட்ட செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றனர். இப்படியான சம்பவங்கள் இணையம் வளர்ந்த பின்னர் பல நடந்துள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி சுஹாசினி தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதனைப் பார்த்த இணையவாசி ஒருவரது கமெண்ட் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகை சுஹாசினியின் தந்தையுமான சாருஹாசன் தீபாவளி தினத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான தகவல்களை சுஹாசினியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. சாரு ஹாசனுக்கு 93 வயது என்பதால் பலரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயம் அமெரிக்காவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தினைப் படிக்கச் சென்றுள்ள கமல்ஹாசன் வரை அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

விஷயத்தை கேள்விப்பட்ட கமல்ஹாசன், உடனே மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டது மட்டும் இல்லாமல், தனது அண்ணனின் உடல்நிலை குறித்தும் கேட்டு அறிந்து கொண்டார். இதுமட்டும் இல்லாமல் தேவைப்பட்டால் அமெரிக்காவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகளைச் செய்யவும் கமல்ஹாசன் ஆயத்தமானதாக தகவல்கள் வெளியானது. சாருஹாசன்: இது தொடர்பாக சுஹாசினி முதலில் வெளியிட்ட பதிவில், ” தீபாவளிக்கு முன்தினம் இரவு தனது அப்பா சாருஹாசனை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாகவும். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் பகிர்ந்திருந்த வீடியோவில், தனது தந்தை அறுவை சிகிச்சைக்கு தயாராக இருக்கின்றாரா எனக் கேள்வி எழுப்ப, அதற்கு சாருஹாசன் தான் தயார் என பதில் அளிக்கின்றார்”.

இந்தப் பதிவினைப் பார்த்த நடிகர் மாதவன் உட்பட அனைவரும் நடிகை சுஹாசினிக்கு ஆறுதல் தெரிவித்தும், சாருஹாசன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் கமெண்ட் செய்திருந்தனர்.

இப்படியான நிலையில் நேற்று அதாவது நவம்பர் 2ஆம் தேதி தனது தந்தையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்தப் புகைப்படங்களுக்கு, ” எப்போதும் அப்பாவின் மகள்” என கேப்ஷனும் இட்டுள்ளார். இந்தப் பதிவினைப் பார்த்த பல இணையவாசிகள், சுஹாசினிக்கு தைரியம் தெரிவிக்கும் வகையில், கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக சாருஹாசன் மிகவும் தைரியமான மனிதர். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என கமெண்ட் செய்தனர். இதற்கிடையில் ஒரு இணையவாசி RIP என கமெண்ட் செய்துள்ளார். இந்த இணையவாசியின் கமெண்ட்டினைப் பார்த்த பலரும், ” என்னங்க இப்படி விவஸ்தை கெட்டத்தனமாக கமெண்ட் செய்து இருக்காரு” என பேசி வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT