Monday, November 4, 2024
Home » தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்

தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்

- பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

by Prashahini
October 31, 2024 9:30 am 0 comment

இந்தவிழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச்செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிரவைக்கட்டும். இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்பவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுபடுத்திக்கொள்வோம்.

அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக்கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப நாம் மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது.

‘வளமான தேசம் -அழகான வாழ்க்கை’ என்ற எமது அரசியல் கொள்கையின் மூலம் எங்கள் கூட்டு இலக்கானது அனைவரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும், அனைவரையும் உள்ளடக்குவதை உறுதிசெய்வதும் ஆகும்.

இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்.

இன்று தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள, அமைதியான தீபாவளி வாழ்த்துக்கள்!

– பிரதமர் ஹரினி அமரசூரிய –

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x