Home » பாகிஸ்தானில் பலூச் மற்றும் பஷ்டூன் அமைதி ஆர்வலர்களுக்கு எதிராக அடக்குமுறை

பாகிஸ்தானில் பலூச் மற்றும் பஷ்டூன் அமைதி ஆர்வலர்களுக்கு எதிராக அடக்குமுறை

by Rizwan Segu Mohideen
October 28, 2024 7:54 pm 0 comment

பாகிஸ்தானில் சிறுபான்மை இனமான பலூச் மற்றும் பஷ்டூன் இனங்களுக்கு எதிரான அரச அடக்குமுறை தீவிரமடைந்து வருகிறது. அவர்களின் அகிம்சை போராட்டங்கள் மற்றும் முக்கிய ஆர்வலர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன. பலோச் யக்ஜெஹ்தி கமிட்டியின் (BYC) தலைவர்களான டொக்டர் மஹ்ராங் பலோச் மற்றும் சம்மி தீன் பலோச் ஆகிய பிரபல பெண் பலூச் ஆர்வலர்கள் முறையான ஆவணங்கள் இருந்தும் வெளிநாடு செல்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. “பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை” கூறி மக்களைத் தூண்டியதற்காக மஹ்ராங் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பஷ்தூன் சிறுபான்மையினருக்காக குரல்கொடுக்கும் சிவில் உரிமை அமைப்பான பஷ்தூன் தஹாஃபுஸ் இயக்கத்தை (PTM) ‘தடைசெய்யப்பட்ட அமைப்பாக’ அரசாங்கம் அறிவித்தது. இந்த நடவடிக்கைகள் பலூச் மற்றும் பஷ்தூன் சிறுபான்மையினரை அரசின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக பேசுவதிலிருந்து அமைதிப்படுத்துவதற்கான தெளிவான முயற்சிகளாகும். பாகிஸ்தானின் இராணுவம் அமைதியான கூட்டங்களைத் தாக்கியுள்ளது இதன் விளைவாக பல பலூச் மற்றும் பஷ்டூன் நபர்கள் கொல்லப்பட்டனர். அல்லது கடுமையாக காயமடைந்தனர். பாதுகாப்பு விடயங்களில் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் சீனத் தலையீடு இன சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை அதிகப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்த ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க வளர்ந்து வரும் தலைவர்களை” கொண்டாடும் டைம் இதழின் கண்காட்சிக்கு அழைக்கப்பட்ட மஹ்ராங் அமெரிக்காவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்.வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராக மஹ்ராங்கை டைம் அங்கீகரித்துள்ளது. அவர் விமான நிலையத்தில் ஐந்து மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டார்.மேலும் அவரது கடவுச்சீட்டு மற்றும் கைபேசியை கராச்சி காவல்துறை மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறையினர் கைப்பற்றினர். “பலூச்சின் குரல்கள் சர்வதேச அளவில் கேட்கப்படுவதைத் தவிர, எனது பயணத்தைத் தடுப்பதில் எந்த நியாயமான நோக்கமும் இல்லை.” அவரின் பயணத்தைத் தடுப்பது “அவரது நடமாட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அப்பட்டமான மீறல்” என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியது.

மேலும், பலூச் மக்களுக்கான அவரது குரலையும் செயல்பாட்டையும் மேலும் நசுக்க மஹ்ராங் மீது ஒரு போலி பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. “அரசு மற்றும் அதன் நிறுவனங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகவும், தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பி.எல்.ஏ [பலோச் லிபரேஷன் ஆர்மி] பயங்கரவாதியுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த நிலையில் பலூச் ஓமனுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.ஆனால் பலுசிஸ்தான் அரசாங்கத்தால் வெளியேறும் கட்டுப்பாட்டுப் பட்டியலில் (ECL) அவரது பெயர் இடம் பெற்றுள்ளதாகக் கூறி கராச்சி விமான நிலையத்தில்அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இரண்டு பெண் செயற்பாட்டாளர்களும் மனித உரிமை மீறல்கள், வளங்களைச் சுரண்டுதல் மற்றும் மாகாணத்தில் அடிப்படை வசதிகளை வழங்கத் தவறியமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குவாடாரில் மாபெரும் ‘பலோச் ராஜி முச்சி’ (பலோச் தேசியக் கூட்டம்) நடத்தினார்கள். இந்த கூட்டம் குறிப்பிடத்தக்க சர்வதேச கவனத்தை ஈர்த்தது.இது பிராந்தியத்தில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அரச அதிகாரிகளுக்கு கணிசமான சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT